இடுகைகள்

அல்ல - இல்லை வேறுபாடு

  அல்ல இன்று நாம் "அல்ல" என்ற சொல் பயன்படுத்த வேண்டிய இடத்தில் கூட "இல்லை" என்று கூறி தவறாக பேசி வருகிறோம். கீழே "அல்ல" மற்றும் "இல்லை" என்ற சொற்களின் வேறுபாட்டை விளக்க சில எடுத்துக்காட்டுகள் உள்ளன எடுத்துக்காட்டு 1. அவர் அறிவியல் ஆசிரியர் அல்ல, தமிழ் ஆசிரியர் 2. ஆறு மணிக்கு அல்ல, ஐந்து மணிக்கு வருவேன் 3. இது என்னுடையது அல்ல, உங்களுடையது 4. இது மோர் அல்ல, தயிர் 5. என் பெயர் மாரிமுத்து அல்ல, மாரி செல்லன் 6. நான் அவன் அல்ல இல்லை 1. அவர் இங்கு இல்லை 2. என்னிடம் காசு இல்லை 3. நான் வருத்தப்பட வில்லை 4. நான் இதை படிங்க வில்லை 5. நான் இதை செய்ய வில்லை 6. இதில் எந்த தவறும் இல்லை